கோடீஸ்வரியான மாலலா

தான் எழுதிய ‘ I am Malala’ என்ற புத்தகத்தின் விற்பனை மற்றும் பதிப்புரிமை தொகை மூலம் மகோடீஸ்வரியான மாலலா கோடீஸ்வரி ஆகியிருக்கிறார்.

பாகிஸ்தானில், பெண்கள் உரிமைக்காகப் போராடி வந்த மலாலாவின் செயல்களினால் ஆத்திரம் அடைந்தனர் தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ம் தேதி, அவர் பள்ளிக்கூடத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்குப் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

தீவிரவாதிகளின் கொலை முயற்சியில், மலாலா மரணத்தின் விளிம்பு வரை சென்று, பின்னர் லண்டனில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கு, பர்மிங்ஹாமில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தொடர்ந்து பெண் கல்விக்காகவும், பெண் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், தனது அனுபவத்தைக் கொண்டு ‘I am Malala’ என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதினார். இந்த புத்தகத்தை விற்பனை செய்வதற்காகவும், பதிப்புரிமையை பாதுகாப்பதற்காகவும் நிறுவனம் ஒன்றை நிறுவினார். மலாலா மற்றும் அவரது குடும்பத்தினர் இதன் பங்குதாரர்களாக உள்ளனர்.

இந்த நிறுவனத்தின் மதிப்பு கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சுமார் ரூ.15 கோடியாக இருந்தது. மேலும், அந்த நிறுவனம் சுமார் ரூ.7.4 கோடி லாபம் ஈட்டியதாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும், மலாலா புத்தகத்தின் சொற்பொழிவுகளை பயன்படுத்துபவர்கள் இந்த நிறுவனத்துக்கு பதிப்புரிமை தொகை செலுத்தி வருகின்றனர். இதன் மூலமும் மலாலாவின் நிறுவனம் வருவாய் ஈட்டி வருகிறது.

புத்தகத்தின் விற்பனை மற்றும் பதிப்புரிமை ஆகியவற்றின் மூலம் கிடைத்த தொகையில் தற்போது மலாலா கோடீஸ்வரியாகி இருக்கிறார்.

malala-3

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்