உலக அதிசயமான எகிப்து பிரமிட்டுக்களை தாக்கி அழிக்கப் போவதாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மிரட்டல் (Video)

உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள்தான் எங்களின் தாக்குதலுக்கான அடுத்தகுறி என்பதை உணர்த்தும் விதமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, ஐ.எஸ். தீவிரவாதிகள் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் ஈராக்கில் உள்ள 2,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அசாரியர் ஆட்சிக்காலத்தில் நிம்ருத் நகரில் கட்டப்பட்ட ஒரு கோயில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்படுகிறது.

தகர்க்கப்பட்ட இடத்தில் இருந்து புகைமூட்டம் கிளம்புகிறது, இதே காட்சியை இரண்டு முறை ‘ரிவர்ஸ் மோஷனில்’ எடுத்துக்காட்டும் அந்த வீடியோவின் இறுதி காட்சியில், எகிப்திய பிரமிடின் புகைப்படம் இடம்பெறுகிறது.

இதன் மூலம், ஐ.எஸ். தீவிரவாதிகளின் அடுத்த தாக்குதலுக்கான இலக்கு எகிப்திய பிரமிடுகள்தான் என்பது தெளிவாகிறது. அவர்கள் வெளியிட்டுள்ள மிரட்டல் வீடியோ, உங்கள் பார்வைக்கும்..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்