ஆப்கானிஸ்தானில் எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் பலி

ஆப்கானிஸ்தானில் வைத்து எறிகணைத் தாக்குதலில் அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட புகைப்பட ஊடகவியலாளரும் மொழி பெயர்ப்பாளருமான David Gilkey யே கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் இராணுவத்துடன் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் David Gilkey கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மார்ஜா நகரிற்கு அருகாமையில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11 தாக்குதல்கள் முதல் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் செய்திகளை டேவிட் சேகரித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் அமெரிக்காவில் தேசிய ரீதியான விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டேவிட் உள்ளிட்டவர்கள் பயணித்த வாகனத்தின் மீது தீவிரவாதிகள் எறிகணைத் தாக்குதல் நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

gilkey1

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்