தென்கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருது….!

தென் கொரிய பெண் எழுத்தாளருக்கு சர்வதேச விருதும், ரூ. 50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

தென் கொரியாவை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஹன்காங் (49). இவர் கற்பனை கலந்து எழுதுவதில் வல்லவர். ‘தி வெஜிடேரியன்’ என்ற நாவல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர்.

தற்போது இவர் அந்த புத்தகத்துக்காக ‘மேன் புக்கர்’ என்றழைக்கப்படும் சர்வதேச விருது பெற்றுள்ளார். அத்துடன் அவர் ரூ.50 லட்சம் விருதும் பெற்றார்.

இந்த போட்டியில் நோபல் பரிசு பெற்ற ஓர்கன் பமுக், உள்ளிட்ட 6 பேர் இடம் பெற்றனர். அவர்களை பின்னுக்கு தள்ளி ‘மேன் புக்கர்’ சர்வதேச விருதை ‘ஹன்காங்’ பெற்றார். விருது பெற்ற ‘தி வெஜி டேரியன்’ என்ற கதை தென்கொரிய மொழியில் எழுதப்பட்டது. அதை டெபோரா ஸ்மித் (28) என்ற பெண் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தார். எனவே பரிசு தொகையில் இவருக்கும் பங்கு தொகை வழங்கப்பட்டது.

மிகவும் பிரபலமான ஹன் காங் தென்கொரியாவின் சாங் இலக்கிய விருது பெற்றனர். இளங்கலைஞர் விருது, கொரிய இலக்கிய விருது உள்ளிட்டவற்றையும பெற்றுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்