காணிகளை விடுவிக்குமாறு கோரி யாழில் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் (Photos)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலுள்ள தமது நிலங்களை விடுவிக்குமாறு கோரி 32 நலன்புரி முகாம்களை சேர்ந்த மக்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன், டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் கண்ணகி நலன்புரி முகாமில் இருந்து ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு நலன்புரி முகாமைச் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்த உள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்துள் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

எனினும், அதன்பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்த கருத்துக்கள் நம்பிக்கையை கேள்விக் குறியாக்கியுள்ளதாக நலன்புரி முகாம்களை சேர்ந்த மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையிலேயே காணிகளை விடுவிக்குமாறு கோரி அஹிம்சை வழியில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ஜனாதிபதிக்கே தம்மை சொந்த இடத்தில் குடியமர்த்துவதற்கும் காணிகளை மீளக் கையளிப்பதற்கும் உரிமையுண்டு எனக் குறிப்பிட்ட நலன்புரி நிலையங்களின் பொது நிர்வாகம், அவர் கூறியது போன்று ஆறு மாத காலத்துக்குள் தமக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தமது போராட்டமானது எந்தவித கட்சி சார்பும் அற்ற போராட்டம் எனவும் குறித்த போராட்டத்திற்கு அனைத்து கட்சிகள், புலம்பெயர் உறவுகள், பொது அமைப்புக்கள், பல்கலைகழக மாணவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நலன்புரி முகாம் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் உண்ணாவிரத்தில் எந்தவித பயனும் கிடைக்காத பட்சத்தில் அனைவரும் ஒன்றுசேர்ந்து தமது காணிகளுக்குள் நீராலும் நிலத்தாலும் வெள்ளைக்கொடியோடு செல்வோம் என எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

4788adbd-7b80-4db8-9fd0-f8736cb5087f

7d16542a-c3d7-4ff3-bca9-7a130493c413 (1)

ddce983c-73ad-4d77-8a87-252e7afae7d7

a06d4efb-e254-4495-8bdd-6d9e4d881fb2

21fb01b9-7b68-4eea-b7e8-517c0b0967ae

61517f81-d1b9-4709-8f89-cb6fa71300d1

cd969645-2349-49ae-a3d4-e4b62843ce2f

7fee044a-ad1b-4a61-85a7-c1f47faa46e1

84c4b696-1bd1-4e0c-ab6d-38d452f27722

ce612286-e668-4d5d-a548-c39673435209

d737e1c3-88e2-46a2-9785-9c070580ee20

f8088d86-888c-4416-9250-a40bea958261

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்