லொட்ஜில் கள்ளக் காதலியுடன் மதபோதகரை அதிரடியாகக் கைது செய்த பொலிஸ் (Video)

கன்னியாகுமரியில் விபசார வழக்கில் சிக்கியதால் போதகரின் பதவி பறிக்கப்பட்டது.

குமரி மாவட்டம் மயிலாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செலின்ஜெபசுப ஆரோன்(39). இவர் கன்னியாகுமரி லீபுரத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் மத போதகராக இருந்தார்.

இவருக்கும், ஈத்தாமொழி தர்மபுரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இதையடுத்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போதகர் செலினையும், அந்த பெண்ணையும் எச்சரித்து அனுப்பினர். இருவரும் ஒன்றாக சந்திக்க கூடாது என எழுதியும் வாங்கினர். அதன் பின்னரும் போதகர் தொடர்ந்து தனது கள்ளக்காதலியை சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கன்னியாகுமரி லாட்ஜில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் போதகர்செலின், தனது கள்ளக்காதலியுடன் பிடிபட்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். லாட்ஜ் உரிமையாளர் ஜேம்ஸ் மற்றும் மற்றொரு பெண்ணும் பிடிபட்டனர்.

பிடிபட்ட அனைவர் மீதும் போலீசார் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். மீட்கப்பட்ட இருபெண்களும் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கைதான போதகர் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் ஆகியோர் உடனடியாக ஜாமீனிலும் விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே விபசார வழக்கில் கைதான செலின்ெஜபசுப ஆரோனின் போதகர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு பதில் தற்காலிக போதகர் லீபுரம் சபைக்கு நியமிக்கப்பட்டுஉள்ளார்.

1 கருத்து

உங்கள் கருத்தை சொல்லுங்கள்