வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்த சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், ரிசாத் பதியுதீன் (Video)

இம்முறை தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன் மற்றும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த ரிசாத் பதியுதீன் ஆகியோர் தமக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்-

சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில்,

இம்முறை தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேராதரவை வழங்கியுள்ளார்கள். அதற்கு, தமிழ் மக்கள் சார்பில் நன்றியைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம். விசேடமாக வன்னி மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்த மக்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காணாமல் போனோர் பிரச்சினை, அரசியல் கைதிகள் விடுதலை, வாழ்வாதார மேம்பாடு தொடர்பில் விரைவில் கூட்டமைப்பின் தலைமையிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்.

வைத்தியகலாநிதி சிவமோகன் கருத்து தெரிவிக்கையில்,

நீதியான, பயங்களற்ற நிலையில் தேர்தலை நடாத்தி இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்டத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கின்றது.

அரசியல் ஸ்திரத் தன்மையை ஏற்படுத்துவதன் ஊடாக பொருளாதார அபிவிருத்தியை எமது மக்களை நோக்கி நகர்த்துவது தான் எமது இலக்கு. அரசியல் ஸ்திரத்தன்மை என்பது வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் நாம் கௌரவமாக வாழ எனது குரல் நாடாளுமன்றில் ஒலிக்கும்.

ரிசாத் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில்,

எங்களது ஐக்கிய தேசிய முன்னணி 39,500 வாக்குகளைப் பெற்றுள்ளது.

கட்சிக்காக வாக்களித்த தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அல்லல்படுகின்ற மக்களுக்கு நேர்மையான வகையில் உதவி செய்வோம்.

bbb

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்