உண்ணாவிரத்தை நிறைவு செய்தார் தோழர் தியாகு

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 தினங்களாக உண்ணாவிரதம் இருந்துவந்த தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு, இன்று தனது உண்ணாவிரதத்தை முடித்தார்.

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது, கச்சத்தீவை மீட்க வேண்டும், இலங்கைக்கு இந்தியா போர் கப்பல்கள் வழங்க கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1ஆம் தேதி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தனது உண்ணாவிரதத்தை தொடங்கினார் தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு.

இந்நிலையில், அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி சென்னை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மீண்டும் புரசைவாக்கத்தில் உண்ணாவிரதத்தை தொடங்கிய தியாகுவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளது. இதையொட்டி சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தியாகு அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருக்கும் தியாகுவிடம், உண்ணாவிரதத்தை கைவிட போலீசார் நிர்பந்தித்தனர். ஆனால், உண்ணாவிரதத்தை கைவிட முடியாது என தியாகு திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

இதனிடையே தியாகு தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என பல்வேறு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தினர். இந்நிலையில் தியாகுவை இன்று சந்தித்த விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர், இலங்கையில் நடைபெறவுள்ள காமன்​வெல்த் மாநாட்​டில் பங்​கேற்​பது குறித்து தமிழ் மக்​களின் உணர்​வு​களை மதித்து நல்ல முடி​வு​ எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்ததை சுட்டிக்காட்டி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பள்ளிக் குழந்தைகள் அளித்த பழச்சாற்றை குடித்து தியாகு இன்று மாலை தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.
thiyaku

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்