Toronto Premier Cricket League இன் முதலாவது ஆண்டு பரிசளிப்பு விழா (Photos)

Toronto Premier Cricket League இன் முதலாவதாண்டு பரிசளிப்பு நேற்று ஞாயிறு மாலை ஸ்காபுறோவிலுள்ள
Peter and Paul Banquet Hall மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பிரதம விருந்தினராக ரொறண்டோ மேயர் திரு.றொப் போட் கலந்து கொண்டார். அவர் மண்டபத்தினுள் நுழையும் போது பொது மக்கள் அவரை மண்டபத்தினுள் நுழைய விடாது சூழ்ந்து கொண்டு அவருடன் இணைந்து புகைப் படம் எடுத்துக் கொண்டனர். மேயரின் சகோதரர் திரு டக் போட்டும் வருகை தந்திருந்தார்.

சிறப்பு விருந்தினர்களாக என்.டி.பி.கட்சியின் ஒன்ராறியோ மாகாணத் தலைவர் திரு.நீதன்சான், ஒன்ராறியோ மாகாண எம்.பி.திரு.பாஸ் பல்கிசூன், ரொறண்டோ மாநகர சபை உறுப்பினர் திரு. றேமன்ட் சோ, சட்டத்தரணி திரு.ஹரி ஆனந்தசங்கரி, கல்விச் சபை உறுப்பினர் யுவனிதா நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“நடன தாரகை” செல்வி மதுமிதா பாஸ்கரன் வரவேற்பு நடனம் ஆடினார்.

விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.நியாசன் ராமச்சந்திரன் உரையாற்றிய போது,

தமது விளையாட்டுக்கழகத்தின் வளர்சிக்கு முக்கிய காரணமாக உள்ள விளையாட்டு வீரர்கள், தம்முடன் இணைந்து செயற்படும் பொலிஸ் கிறிக்கெற் கழகத் தலைவர் திரு.அமீர் பட், இந்நிகழ்ச்சியை நடாத்த உதவி புரிந்த வீடு விற்பனை முகவர்களான திரு.அசோகன் சந்திரலிங்கம், திரு.றஜீவ் கோனேஸ்வரன், திரு.மனோ சுப்பிரமணியம் மற்றும் “தமிழ் வண்” தொலைக் காட்சி நிறுவனம் ஆகியனவற்றுக்கு நன்றி தெரிவித்தார்.

(2 ஆம் இணைப்பு)

Toronto Premier Cricket League இன் 2013 ஆம் ஆண்டுக்கான மிகவும் பெருமை வாய்ந்த வீரருக்கான கௌரவ விருதினை Devilz Cricket அணியினைச் சேர்ந்த கமல் ஆறுமுகம் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அவர் 25 இன்னிங்ஸ் இல் 560 ரன்களை அடித்தார். சராசரியாக ஒரு விளையாட்டில் 25.45 ரன்களைப் பெற்றுள்ளார்.

அதிகளவு சிக்ஸ்களை அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். மொத்தம் 61 சிக்ஸ்களை விளாசி இருந்தார்.

அதிகளவு விக்கெட்டுக்களையும் சாய்த்த பெருமை இவருக்கே உண்டு. 65 விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளார். ஐடியல் கிரிக்கெட் கழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் 8 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி உள்ளார்.

Black Cats அணியைச் சேர்ந்த சங்கர் கோபாலசுந்தரம் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதினைப் பெற்றுக் கொண்டார்.

சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதினை Knights Cricket அணியைச் சேர்ந்த திரு. ரஜீவன் கணேசன் பெற்றுக் கொண்டார்.

சிறந்த All rounder க்கான விருதினை Black Cats அணியைச் சேர்ந்த திரு. ஜோன்சன் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார்.

(தமிழ் சி.என்.என் மூர்த்தி)

Toronto Premier Cricket club News

Toronto Premier Cricket club News (1)

Toronto Premier Cricket club News (2)

Toronto Premier Cricket club News (3)

Toronto Premier Cricket club News (4)

Toronto Premier Cricket club News (5)

Toronto Premier Cricket club News (6)

Toronto Premier Cricket club News (7)

Toronto Premier Cricket club News (8)

Toronto Premier Cricket club News (9)

Toronto Premier Cricket club News (10)

Toronto Premier Cricket club News (11)

Toronto Premier Cricket club News (12)

Toronto Premier Cricket club News (13)

Toronto Premier Cricket club News (14)

Toronto Premier Cricket club News (15)