17 குழந்தைகளை கற்பழித்த காமுகனுக்கு மக்கள் முன் தூக்கு! (அதிர்ச்சி வீடியோ படங்கள் இணைப்பு)

எகிப்தை சேர்ந்தவர் ஹஜாத்காடி (33). இவன் குவைத்சிட்டியில் தங்கி இருந்தான். அப்போது அங்கு 10 வயதுக்குட்பட்ட 17 சிறுவர் மற்றும் சிறுமிகளை கடத்தி கற்பழித்தான்.

எனவே, இந்த காமகொடூரனை பிடிக்க போலீசார் தேடிவந்தனர். இதை அறிந்த அவன் குவைத்தை விட்டு விமானத்தில் தப்பிக்க முயன்றான்.

இருந்தும் அவனை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

KUWAIT
இச்சம்பவம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. அதைத் தொடர்ந்து அவன் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

th_hang
எனவே, அவன் சம்பவம் நடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் முன்னிலையில் நேற்று தூக்கிலிடப்பட்டான்.

இதேபோன்று மற்றொரு எகிப்தியரும் பொது மக்கள் மத்தியில் தூக்கிலிடப்பட்டான்.

அவனது பெயர் அகமது அப்துல்கலாம் அல்-பைலி. இவன் ஒரு வீட்டுக்குள் புகுந்து கணவன்- மனைவியை உயிருடன் எரித்து கொன்றான்.