மே 19 இல் Toronto Premier Cricket League தொடக்க விழா!

ரொறன்ரோ பிரீமியர் லீக்கின் Toronto Premier Cricket League (TPCL) கோலாகலமான தொடக்க விழா மே 19 அன்று கனடாவில் இடம்பெறவுள்ளது.

இந்த அமைப்பானது ரொறன்ரோவில் பதிவு செய்யப்பட்ட இலாப நோக்கற்ற அமைப்பு ஆகும்.

ரொறன்ரோ நகரில் வாழும் சமூகத்தவர்களிடையே கிரிக்கட்டை ஊக்குவித்து, விருத்தி செய்யும் வகையிலும், கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு சிறந்த போட்டிகளைக் கண்டு களிக்கும் வகையிலும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

TPCL அமைப்பின் செயற்குழு மற்றும் உறுப்பினர்கள் இந்த ஆண்டுக்கான TPCL போட்டியினை மே 19 அன்று நடாத்த தீர்மானித்துள்ளனர்.

அந்த வகையில் போட்டியின் துவக்க விழா நிகழ்வுகள் கனடாவின் ரொறன்ரோவில் உள்ள Charlottetown Park இல் மே 19 அன்று காலை 10 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாக உள்ளது.

இந்த தகவல்கள் அனைத்தையும் TPCL அமைப்பின் தலைவரான நேசன் ராமச்சந்திரன் அவர்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

tpclll

tpclfront

tpcl1